உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அத்திவரதரை தரிசிக்க வருவோருக்கு சிறப்பு வசதிகள்

அத்திவரதரை தரிசிக்க வருவோருக்கு சிறப்பு வசதிகள்

 காஞ்சிபுரம் : காஞ்சி, அத்தி வரதர் வைபவத்திற்கு வரும் பக்தர்களுக்காக, பஸ், வீல் சேர் மற்றும் பேட்டரி கார்கள் இயக்கப்பட உள்ளன.

காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில், அத்தி வரதர் வைபவம், நாளை, வெகுவிமரிசையாக துவங்க உள்ளது. இந்த வைபவம், ஆக., 17ம் தேதி வரை நடைபெறும். 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வு என்பதால், பல்வேறு முன்னேற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத் துறை, மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.வெளியூர், வெளிநாடுகளில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள், பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் என, பலவித தரிசனத்திற்கு வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, பல அடிப்படை வசதிகள், பக்தர்களுக்கு செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

பக்தர்களுக்கு வசதிகள்: கோவிலைச் சுற்றிலும், 30க்கும் மேற்பட்ட தற்காலிக கழிப்பறைகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.மினி பஸ்கள்நகரில், போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு, ஒலிமுகமதுபேட்டை, ஓரிக்கை, பச்சையப்பன் கல்லுாரி வளாகம் ஆகிய இடங்களில், தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பஸ் நிலையங்களில் இருந்து, 20 மினி பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த பஸ்கள், 10 நிமிடங்களுக்கு, ஒரு மினி பஸ் என, சுழற்சி முறையில் இயக்கப்பட உள்ளன.பேட்டரி கார். இது தவிர, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்களின் வசதிக்கு, வரதராஜ பெருமாள் கோவிலில், வசந்த மண்டபம் வெளியே, சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாய்தளத்தில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக சென்று, அத்தி வரதரை தரிசனம் செய்யும் வகையில், வீல் சேர் மற்றும் பேட்டரி கார் ஆகியவை இயக்கப்பட உள்ளன.

இதற்காக, ஆறு, சீட் கொண்ட இரண்டு பேட்டரி காரும்; எட்டு சீட் கொண்ட இரண்டு பேட்டரி காரும்; 14 சீட் கொண்ட இரண்டு பேட்டரி கார் என, மொத்தம் ஆறு பேட்டரி கார்கள் இயக்கப்பட உள்ளன. இது மட்டுமல்லாது, 20க்கும் மேற்பட்ட வீல் சேர்களும் தயார் நிலையில் கோவிலில் வைக்கப்பட்டுள்ளன.

ஏமாறாதீர்: தரகர்களிடம் ஏமாறாதீர். ஆந்திரா, கர்நாடகா, வட மாநிலங்களின் இருந்து வரும் பக்தர்கள், தரகர்களிடம் ஏமாறாமல் இருப்பதற்கு, தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் விழிப்புணர்வு பதாகை அமைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, கோவிலைச் சுற்றிலும், பார்க்கிங் மற்றும் நகரின் முக்கிய இடங்களில் இது போன்ற விழிப்புணர்வு பதாகை அமைக்கும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !