பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் மண்டலாபிஷேகம்
புதுச்சேரி:பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் மண்டல அபிசேகம் நடந்து வருகிறது.புதுச்சேரி அருகே உள்ள பஞ்சவடீயில், 36 அடி உயர ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேய சுவாமி கோவில் அமைந்துள்ளது.
இங்கு ஏற்கனவே உள்ள வலம்புரி மகா கணபதி, ஜெயமங்கள பட்டாபிஷேக ராமச்சந்திர மூர்த்தி சன்னதிகளுடன், ஸ்ரீவாரி வேங்கடாசலபதிக்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. திருப்பணிகள் நிறைவடைந்து கடந்த 23ம் தேதி மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. கடந்த 24 ம் தேதி முதல் மண்டலாபிஷேக பூஜை துவங்கியது. வரும் ஆகஸ்ட் 11 ம் தேதியுடன் மண்டலாபிஷேகம் நிறைவு பெறுகிறது. இதையொட்டி தினந்தோறும் காலை நான்கு சன்னதிகளிலும் அபிஷேகம் மற்றும் சுவாமி அலங்கரிக்கப்பட்டு மண்டல அபிஷேக பூஜைகள் நடந்து வருகிறது. 48 நாட்கள் நடைபெறும் இந்த மண்டலாபிஷேக பூஜையில் கலந்து கொண்டு பக்தர்கள் சுவாமியின் அருளை பெறுமாறும், மேலும் சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்ய விரும்பும் பக்தர்கள் பஞ்சமுக ஸ்ரீஜெயமாருதி சேவா டிரஸ்டை தொடர்பு கொள்ளலாம்.