உத்தரகோசமங்கையில் ஜூலை 6ல் மாணிக்கவாசகர் குருபூஜை
ADDED :2376 days ago
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன்
கோயிலில் தனி சன்னதியாக மூலவர் மாணிக்கவாசகர் உள்ளார்.
உத்தரகோசமங்கை பற்றி மாணிக்கவாசகர் திருப்பொன்னூஞ்சல் பதிகத்தில் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தில் வருகிற ஜூலை 6ல் மாணிக்கவாசகர் குருபூஜை (சனிக்கிழமை) நடக்க உள்ளது.
அன்று காலை 9:00 முதல் பகல் 12:00 மணி வரை சிறப்பு அபிஷேக, ஆராதனை, பஜனை, நாமாவளி, பாராயணம், அன்னதானம் உள்ளிட்டவைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை ராமநாதபுரம் ராமகிருஷ்ண சேவா மந்திர் அமைப்பினர் செய்துவருகின்றனர்.