புவனகிரி சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
                              ADDED :2313 days ago 
                            
                          
                           புவனகிரி: புவனகிரி அருகே பெருமாத்தூர் சித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 29ம் தேதி அதிகாலை கணபதி ஹோமத்துடன் பல்வேறு பூஜைகள் துவங்கியது. நேற்று (ஜூன்., 30ல்) காலை இரண்டாம் யாக சாலை பூஜைக்குப்பின் கோ பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. 
கடம் புறப்பாடு துவங்கி காலை 10.10 மணிக்கு மூலவருக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. புவனகிரி போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.