உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேத்தியாத்தோப்பு அருகே புனித அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழா

சேத்தியாத்தோப்பு அருகே புனித அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழா

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த தட்டானோடை கிராமத்தில் புனித அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழாவில் திருத்தேர்பவனி நடந்தது.

தட்டானோடை கிராமத்தில் இந்தாண்டிற்கான பெருவிழா கடந்த 27ம் தேதி மாலை 6.00 மணிக்கு கொடியேற்றத்துடன் நடந்தது. 28ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை நவநாள் திருப்பலி நடந்தது. நேற்று முன்தினம் 30ம் தேதி மாலை 6.00 மணிக்கு திருவிழா திருப்பலி நடந்தது.இரவு 10.00 மணிக்கு சப்பரத்தில் அந்தோணியார், மாதாவுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டது. தேர் கிராமத்தில் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !