நினைத்தது நிறைவேற பரிகாரம்
ADDED :2372 days ago
முருகனின் மூலமந்திரம் ’ஓம் ஸௌம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் ஸௌம் நமஹ’. சாந்தானந்த சுவாமிகள் இயற்றிய கந்தகுரு கவசத்தில் இந்த மந்திரம் உள்ளது. சக்தி வாய்ந்த இதை 48 நாட்கள் தினமும் 108 முறை ஜபித்து வர நினைத்தது நிறைவேறும். இதற்கு வாய்ப்பு இல்லாதவர்கள் 48 வாரம் செவ்வாய்க்கிழமையில் ஜபிக்கலாம். செவ்வாயன்று காலையில் நீராடி காலை 6:00 – 7:00 மணிக்குள் முருகன் கோயில் அல்லது முருகன் படத்தின் முன் அமர்ந்து 108 முறை ஜபிக்க வேண்டும். செவ்வாய்தோஷத்தால் திருமணம் தடைபடுபவர்கள் இதை ஜபிக்க திருமணயோகம் உண்டாகும். கடன் பிரச்னை தீரும். ஒருவர் தன் வாழ்நாளுக்குள் 21 லட்சம் முறை இதை ஜபித்தால் முருகன் அருளால் பிறவாத வரம் கிடைக்கும்.