விருப்பத்துடன் தோற்றவன்
ADDED :2333 days ago
திருப்பதியில் உள்ள ஏழுமலைகளில் விருஷபாசலம் என்பதும் ஒன்று. இங்கு வாழ்ந்த அசுரன் விருஷபாசுரன். அவன் நரசிம்மரை வழிபட்டு வந்தான். அவனுக்கு ஒரு வித்தியாசமான ஆசை. நரசிம்மருடன் போரிட வேண்டும் என்பதே அது. நரசிம்மரும் அவன் முன் தோன்ற “நரசிம்மா! உன்னுடன் போர் புரிய வேண்டும் என்பது என் ஆசை” என்றான். “நீ தோற்றுப்போவாயே” என்றார் நரசிம்மர். “உங்களிடம் தோற்றாலும், உங்களுடன் போர்புரிந்தேன் என்ற பெருமையே எனக்குப் போதும்,” என்றதும், நரசிம்மரும் சம்மதித்தார். அதுபோல் தோல்வியும் அடைந்தான். தான் தங்கியிருந்து நரசிம்மரை வழிபட்ட மலைக்கு தன் பெயரே வழங்கவேண்டும் என்ற வரம் பெற்றான். அதன்படியே விருஷபாசலம் உருவானது.