சென்னை தி.நகரில், மழை வேண்டி 12 மணி நேரம் கர்நாடக இசை கச்சேரி
ADDED :2373 days ago
சென்னை:தி.நகரில், மழை வேண்டி, 150க்கும் மேற்பட்ட, பிரபல கர்நாடக இசைக் கலைஞர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி, நேற்று 2 ல், நடந்தது.
தமிழகத்தில், கடந்தாண்டு பருவமழை பொய்த்ததால், பல பகுதி களில், கடும் வறட்சி நிலவி வருகிறது. இதில், சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
வெப்ப சலனம் காரணமாக, சென்னையில், சில நாட்கள், மிதமான மழை பெய்தது. ஆனால், குடிநீர் பற்றாக்குறையை போக்கும் அளவிற்கு, போதிய மழை பெய்யவில்லை.மழை வேண்டி, மத வேறுபாடு இன்றி, கோவில், மசூதி, தேவாலயங்களில், சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.தமிழக அரசு சார்பில், கோவில்களில், யாகங்கள் நடக்கின்றன.