நடனபாதேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்
ADDED :2293 days ago
நெல்லிக்குப்பம்: திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றப்பட்டது.
நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரத்தில் பழமையான ஹஸ்ததாளாம்பிகை சமேத நடனபாதேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று காலை கொடியேற்றம் நடந்தது. காலை சிறப்பு அபிஷேகம் முடிந்து சிறப்பு அலங்காரத்தில் நடனபாதேஸ்வரர் எழுந்தருளினார். கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றப்பட்டது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 11ம் தேதி திருக்கல்யாணம் 13ம் தேதி திருத்தேர் உற்சவம், 16 ம் தேதி பைரவர் உற்சவம், 17 ம் தேதி தெப்பல் உற்சவம் நடக்கிறது.