ஆர்.எஸ்.மங்கலம் தையல் நாயகி அம்மன் கோவில் மண்டல பூஜை
ADDED :2293 days ago
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே நாகனேந்தல் தையல் நாயகி அம்மன் கோவில் மண்டல பூஜை விழா நடைபெற்றது.
முன்னதாக மண்டல பூஜையை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் செய்யப் பட்டு பூஜை செய்யப் பட்ட கும்பநீர் மூலவர் மற்றும் பரிகார தெய்வங்களான தர்ம முனீஸ்வரர், வீரபத்திர லாடசாமி, பெரிய நாயகி, காளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கும் ஊற்றப்பட்டது.பின், மூலவர் மற்றும் பரிகார தெய்வங்களுக்கு பால், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் நாகனேந்தல், காவனூர், துத்தியேந்தல், ஊரவயல் கிராம குலதெய்வ வழிபாட்டாளர்கள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.