ஆத்தூர் மாணிக்கவாசகர் குருபூஜை விழா
ADDED :2291 days ago
ஆத்தூர்: ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவிலில் நேற்று, (ஜூலை., 5ல்) மாணிக்க வாசகர் குருபூஜையொட்டி அபிஷேகம் நடந்தது. ஒவ்வொரு ஆண்டும், ஆனி மாதம் மகம் அன்று மாணிக்க வாசகரின் ஜென்ம நட்சத்திர தின குருபூஜை கொண்டாடப்படுகிறது. இன்று (ஜூலை., 6ல்) மாணிக்கவாசகருக்கு குரு பூஜை விழா நடக்கிறது. நேற்று (ஜூலை., 5ல்) காலை கொடியேற் றம், குருபூஜை, மாணிக்கவாசகர், பஞ்சமூர்த்திகள், நால்வர், சேக்கிழார் ஆகியோருக்கு அபிஷே கம் நடந்தது. இன்று (ஜூலை., 6ல்) காலை, 10:00 மணியளவில் அரிகரதேசிக சுவாமிகளின் திருவாசக வரலாற்று அருளுரை நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 4:00 மணியளவில் கயிலை வாத்தியங்களுடன் மாணிக்கவாசகர், பஞ்சமூர்த்திகள், நால்வர், சேக்கிழார் சுவாமிகள் திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.