கரூரில் வரும் 20ல் 63 நாயன்மார்கள் விழா
ADDED :2291 days ago
கரூர்: கரூர் சிவனடியார் திருக்கூட்டத்தின், 26ம் ஆண்டு விழா வரும், 20, 21ல், கல்யாண பசுபதீஸ் வரர் கோவிலில் நடக்கிறது. வரும், 20 காலை, பஞ்சமூர்த்திகள், நாயன்மார்கள், மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், திருக்கல்யாண உற்சவம், மாலை, 5:00 மணிக்கு, 63 நாயன்மார்களின் திருவீதி உலா நடக்கிறது. 21 காலை, கோவிலில் உள்ள அரங்கில், ’திருக் கடவூரில் திருவிளையாடல்கள்’ என்ற தலைப்பில், பேராசிரியர் பாண்டியன், ’11ம் திருமுறை யில் பட்டினத்தார் பாடல்கள்’ என்ற தலைப்பில், பேராசிரியர் மாணிக்கவாசகம் ஆகியோர் பேச உள்ளனர். மாலை நிகழ்ச்சியில், சீகம்பட்டி ராமலிங்கம் ’குமரகுருபரர், பசுந்தமிழ்’ என்ற தலைப்பில் பேசுகிறார்.