உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை மாரியம்மன் கோவிலுக்கு ரூ.2.27 லட்சம் காணிக்கை

உடுமலை மாரியம்மன் கோவிலுக்கு ரூ.2.27 லட்சம் காணிக்கை

உடுமலை : உடுமலை மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கையாக மொத்தம் இரண்டு லட்சத்து 27 ஆயிரத்து 510 ரூபாய் வசூலாகியது.உடுமலை மாரியம்மன் கோவிலில், கடந்த ஜனவரி மாதம் 3ம் தேதி உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தற்போது மார்ச் 27ம் தேதி முதல் தேர்த்திருவிழா துவங்க உள்ளதையடுத்து, கோவில் வளாகத்திலுள்ள நான்கு நிரந்தர உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கைகள் எண்ணப்பட்டன. அதில், நான்கு நிரந்த உண்டியல்களில், மொத்தம் இரண்டு லட்சத்து 27 ஆயிரத்து 510 ரூபாய் வசூலாகியது. மேலும், பொன் இனங்களாக 20 கிராமும், வெள்ளி இனமாக 2 கிராமும் காணிக்கையாக வரப்பெற்றது. மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர், அறநிலையத்துறை ஆய்வாளர் புவனேஸ்வரி, செயல் அலுவலர் சங்கர சுந்தரேசுவரன் ஆகியோர் முன்னிலையில், உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது. காணிக்கை எண்ணும் பணியில், திருக்கோவில் பணியாளர்கள், சேவா சங்கத்தினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !