சூசையப்பர் ஆலய திருவிழா
ADDED :5021 days ago
நாசரேத்: நாசரேத் கந்தசாமிபுரம் புனித சூசையப்பர் ஆலயத்தில் திருவிழா நடந்தது. பிரகாசபுரம் பங்கு தந்தை ராஜா தலைமை வகித்தார். திருவிழா நாட்களில் தினமும் மாலை ஜெபமாலை திருப்பலி, நோயாளிகளுக்கான சிறப்பு பிரார்த்தனை நடந்தது. நேற்று 10 ம் திருவிழா அன்று மாலை சாத்தான்குளம் மறைமாவட்ட முதன்மை குரு எட்வர்ட் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடந்தது. அதைத்தொடர்ந்து ஏழை மக்களுக்கு உதவி வழங்குதல் மற்றும் அசனம் நடந்தது. ஏற்பாடுகளை நாசரேத் கந்தசாமிபுரம் இறைமக்கள் மற்றும் பங்குதந்தை ராஜா செய்திருந்தனர்.