களக்காடு கோயிலில் மூலவர் மீது சூரியஒளி விழும் அதிசயம்
ADDED :5020 days ago
களக்காடு:களக்காடு பெரிய கோயிலில் மூலவர் மீது சூரியஒளி விழும் அதிசயத்தை இன்று முதல் 3 நாட்கள் பார்க்கலாம்.களக்காடு சத்யவாகீஸ்வரர் கோமதி அம்பாள் கோயில் 11ம் நூற்றாண்டு சிற்பகலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் கோயிலாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் மார்ச், செப்டம்பர் மாதங்களில் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை மூன்று நாட்கள் மூலவர் மீது சூரியஒளி விழும் வகையில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.இதன்படி இன்று (20ம் தேதி) காலை மூலவர் மீது சூரியஒளி விழும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து 2 நாட்கள் விழும். மூலவர் மீது சூரியஒளி விழும் நிகழ்ச்சியை பொதுமக்கள், பக்தர்கள் பார்க்க கோயில் நடை அதிகாலையிலேயே திறக்கப்படும். மேலும் சிறப்பு பூஜைகளும் நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், பொதுமக்கள், பக்தர் பேரவையினர் செய்து வருகின்றனர்.