உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா

பேரூர்:பேரூர் பட்டீஸ்வரர் கோவில் கனகசபை மண்டபத்தில், ஆனி திருமஞ்சன விழா நேற்று (ஜூலை., 8ல்) நடந்தது.பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், ஆனி உத்திர நட்சத்திர தினத்தன்று நடைபெறும் திருமஞ்சன விழா, நடராஜர் சன்னதியில் ஸ்நபன கலச பூஜையுடன் நேற்று (ஜூலை., 8ல்) காலை துவங்கியது.தொடர்ந்து, காலை, 11:00 மணிக்கு நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு, 16 வகையான திரவியங்களால் மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர், சிறப்பு அலங்காரத்தில் கோமுனி, பட்டிமுனி, சுந்தரமூர்த்தி நாயனாருக்கு, ஆனந்த தாண்டவ காட்சி அளித்தார்.இதையடுத்து, நடராஜர், சிவகாமி அம்பாள் மற்றும் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு, மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !