உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருந்துறை அண்ணமார் சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்

பெருந்துறை அண்ணமார் சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்

பெருந்துறை: பெருந்துறை அருகே, வி.மேட்டுபாளையம் கிராமத்தில், அண்ணமார்  சுவாமி கோவில் உள்ளது. இங்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை விழா  நடக்கும். கிராம மக்களால் வளர்க்கப்படும் பன்றிகள், விழாவில் பலி கொடுப்பது  வழக்கம். இதற்காக வளர்க்கப்பட்ட, ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பன்றிகள்,  கடந்தாண்டு திருட்டு போனது. இதை அபசகுனமாக கருதிய ஊர்மக்கள், ஆன்மிக  பெரியோர்களிடம் அறிவுரை கேட்டனர். இதை தொடர்ந்து, கும்பாபிஷேகம் நடத்த  முடிவு செய்தனர். சேதமான பகுதிகள் புணரமைத்து, வர்ணங்கள் தீட்டினர். கடந்த,  கும்பாபிஷேக விழா தொடங்கியது. நேற்று (ஜூலை., 8ல்) அதிகாலை, வினாய கர்,  கன்னிமார், அண்ணமார், கருப்பராயன் சுவாமிகளுக்கு, புனித நீர் ஊற்றி  கும்பாபிஷே கம் நடத்தப்பட்டது. சீனாபுரம் விஜயகிரி வேலாயுதசுவாமி  திருக்கோவில் கார்த்திகேய குருக்கள், வினோத் சுப்ரமண்ய குருக்கள் நடத்தி  வைத்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !