உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணராயபுரம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா: அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திகடன்

கிருஷ்ணராயபுரம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா: அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திகடன்

கிருஷ்ணராயபுரம்: பிள்ளபாளையம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில்,  பக்தர்கள் அலகுகுத்தி நேர்த்திகடன் செலுத்தினர். கிருஷ்ணராயபுரம் அடுத்த  பிள்ளபாளையம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில்  திருவிழா, பூச்சாட்டுதலுடன் கடந்த வாரம் துவங்கியது. நேற்று முன்தினம்  (ஜூலை., 7ல்)கரகம்பாலித்து அம்மன் திருவீதி உலா நடந்தது. அலகு குத்துதல், பால்குடம், கரும்பு தொட்டிலில் குழந்தை இட்டு ஊர்வலமாக எடுத்து வருதல் போன்ற, பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சிகள் நேற்று (ஜூலை., 8ல்) நடந்தன. ஏராளமான பக்தர்கள் இதில் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !