புதுச்சேரி நந்திகேஸ்வரர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா
ADDED :2251 days ago
புதுச்சேரி: வெள்ளாழர் வீதியில் உள்ள நந்திகேஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன விழா நடந்தது.புதுச்சேரி வெள்ளாழர் வீதியில், நந்திகேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், நந்திகேஸ்வரருக்கு ஆனி திருமஞ்சன விழா நேற்று (ஜூலை., 8ல்) நடந்தது. விழாவை முன்னி ட்டு நேற்று முன்தினம் (ஜூலை., 7ல்) மாலை 6:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.நேற்று (ஜூலை., 8ல்) காலை 6:30 மணிக்கு ஆராதனை, 7:00 மணிக்குமேல், அடியார்கள் சூழ நந்திகேஸ்வரர் வீதி உலா, நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்றது. கோவில் உற்சவரான நந்திகேஸ்வரர், கடந்த 100 ஆண்டிற்கு மேலாக வீதி உலா செல்லாமல் இருந்த நிலையில், இந்தாண்டு வீதி உலா சென்றதாக பக்தர்கள் தெரிவித்தனர்.