உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா

திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன விழாவையொட்டி நடராஜர் பெருமான், சிவகாமி அம்மன் மாட வீதி உலா  வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு, ஆயிரம் கால் மண்டபத்தில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து நடராஜர் பெருமான், சிவகாமி அம்மன்  நான்கு மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !