சாத்துார் வெங்கடாஜலபதி கோயில் விழா துவக்கம்
ADDED :2322 days ago
சாத்துார் : சாத்துார் வெங்கடாஜலபதி கோயில் ஆனி பிரம்மோத்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கோயில் கொடி மரத்திற்கு ரங்கநாதபட்டர் சிறப்பு அபிேஷகம், பூஜைகள் செய்தார். இதன் பின் உற்ஸவமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. மாலையில் சேஷவாகனத்தில் சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், உபயதாரர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.