பண்ருட்டி வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆனி சிறப்பு திருமஞ்சனம்
ADDED :2321 days ago
பண்ருட்டி:பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சனம் உற்சவ த்தை முன்னிட்டு, நடராஜர், அம்பாள் சிவகாமசுந்தரி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் உற்சவர் நடராஜர், சிவகாமசுந்தரி சுவாமிக்கு ஆண்டுக்கு 6 அபிஷேகம் நடக்கிறது. ஆனி திருமஞ்சனம் முக்கியமான திருவிழா வாகும். ஆனி மாத உத்திர நட்சத்திர நாளில் தேவர்கள், ஸ்ரீநடராஜருக்கு பூஜைகள் செய்வதே ஆனித் திருமஞ்சன திருவிழா.விழாவையொட்டி நேற்றுமுன்தினம் (ஜூலை., 8ல்) மாலை உற்சவர் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின் உற்சவர் நடராஜர், சிவகாம சுந்தரியின் மாடவீதி வலம் வருதல் நடந்தது.