உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல் நரசிம்மர் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு: அளவீடு செய்த நாமக்கல் அதிகாரிகள்

நாமக்கல் நரசிம்மர் கோவில் நிலம் ஆக்கிரமிப்பு: அளவீடு செய்த நாமக்கல் அதிகாரிகள்

நாமக்கல்: ”நாமக்கல் நரசிம்மர் கோவிலுக்கு சொந்தமான, 484 சதுரஅடி நிலம்  ஆக்கிரமிக்கப் பட்டுள்ளது,” என, திருத்தொண்டர்கள் சபை தலைவர்  ராதாகிருஷ்ணன் கூறினார்.

’நாமக்கல் நரசிம்மர், ஆஞ்சநேயர் கோவில்களுக்கு சொந்தமான நிலம்  அபகரிக்கப்பட் டுள்ளது. அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என,  சேலம் மாவட்டம், வீராணம் அல்லிக்குட்டை திருத்தொண்டர்கள் சபை தலைவர்  ராதாகிருஷ்ணன், சென்னை உயர்நீதி மன்றத்தில், மனு தாக்கல் செய்தார். நீதிமன்ற  உத்தரவுப்படி, நரசிம்மர் கோவில் உதவி ஆணையர் ரமேஷ், இந்து சமய  அறநிலையத்துறை உதவி ஆணையர் (பொ) குமரவேல், நகராட்சி ஆணையாளர்  சுதா மற்றும் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர், ஆஞ்சநேயர் கோவில் வீதியில், நில  அளவீடு செய்யும் பணியை, நேற்று (ஜூலை., 9ல்) மேற்கொண்டனர்.

இதுகுறித்து, ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: நரசிம்மர் கோவிலுக்கு  சொந்த மான அனைத்து சொத்துகளும் நில அளவை செய்யப்படுகின்றன.  இன்றைய அளவையின் போது, கோவிலுக்கு சொந்தமான, 484 சதுரடி  அபகரிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. பழைய ஆவணப்படி, 68 சென்ட்  இருந்துள்ளது. தற்போதைய அளவைப்படி, 60 சென்ட் இருப்ப தாக தெரிகிறது.  வரைபட அளவில், நான்கு எல்லைகள் சரியாக இருக்கின்றன. ’அ’ பதிவே ட்டில்,  தவறுதலாக இருப்பதாக தெரிவிக்கின்றனர். ஆய்வு செய்த விபரங்கள், உயர்நீதி  மன்றத்தில், நாளை (இன்று) (ஜூலை., 9,10ல்) தாக்கல் செய்யப்படும். தமிழக அளவில், அறநிலையத்துறை ஆவணப்படி, 4.75 லட்சம் ஏக்கர் நிலம் திருக்கோவிலுக்கு சொந்தமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த நிலம், 70 சதவீதம் அளவுக்கு ஆக்கிரமிப்பில் உள்ளன. அதுதவிர, 1.50 லட்சம் ஏக்கர் நிலங்கள், அரசு கோவில் புறம்போக்கு நிலமாக உள்ளது. கட்டளைக்கு உரிய நிலங்கள், 20 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன. தமிழக அரசுக்கு அவ்வளவு நிலங்கள் சொந்தமாக இல்லை. அவற்றை ஒருங்கிணைத்து, நல்ல நிலையில் மேம்படுத்தும்போது, அரசுக்கு, மதுபானம் மூலம் கிடைக்கின்ற வருமானம் முகாந்திரமே இருக்காது.  

அறநிலையத்துறை நிர்வாகத்தின் வருமானம் மூலமே, அனைத்து வகையான  நலத்திட்டங் களையும் செயல்படுத்த முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !