உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல் அருகே ஏழூர் கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம்

நாமக்கல் அருகே ஏழூர் கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம்

நாமக்கல்: புதுச்சத்திரம் அடுத்த, ஏழூர் கைலாசநாதர் கோவில் நாளை (ஜூலை,  11) கும்பாபிஷே கம் நடக்கிறது. அதை முன்னிட்டு, நேற்று (ஜூலை., 9ல்) காலை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மாலை, காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குடம், முளைப்பாலிகை ஊர்வலம் கோவில் வந்தடைந்தது. இன்று (ஜூலை., 10ல்) காலை, 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாஹ வாசனம், தீபாராதனை, மாலை, 5:00 மணிக்கு யாக சாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை, 7:30 மணிக்கு மருந்து  சாற்றுதல் ஆகியவை நடக்கிறது. நாளை (ஜூலை., 11ல்) காலை, 5:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை மற்றும் கலசங்கள் புறப்பாடு, 8:00 மணிக்கு கைலாசநாதர் சமேத விசாலாட்சி அம்பிகைக்கும் பரிவார கோபுரங்களுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !