மல்லசமுத்திரம் அருகே காகத் தலையம்மன் கோவில் திருவிழா
ADDED :2464 days ago
மல்லசமுத்திரம்: கருமனூர், காகத் தலையம்மன் கோவில் திருவிழா நடந்தது. மல்லசமுத்திரம் ஒன்றியம், கருமனூரில் உள்ள கற்பக விநாயகர், கூத்தாண்டேஸ்வரர், கரியகாளியம்மன், கரிய பெருமாள், காகத் தலையம்மன் கோவிலில், கடந்த, ஜூன், 25ல் பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. தினமும், அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, மெரமனைகள் நடந்தன. நேற்று (ஜூலை., 9ல்) காலை, 7:00 மணியளவில் பெரிய அம்மனுக்கு பொங்கல் வைத்தல், முப்போடு அழைத்தல் நடந்தது.
மாலை, 4:00 மணிக்கு சின்ன அம்மனுக்கு பொங்கல் வைத்து முப்போடு அழைக்கப்பட்டது. இரவு வாணவேடிக்கை நடைபெற்றது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.