உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரபாண்டி சக்தி மாரியம்மன் கோவில் விழா: பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்

வீரபாண்டி சக்தி மாரியம்மன் கோவில் விழா: பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்

வீரபாண்டி: சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி,  ஏராளமான பக்தர் கள் தீர்த்தக்குட ஊர்வலத்தில் பங்கேற்றனர். இளம்பிள்ளை  அருகே, வேம்படிதாளத்தில் புதிதாக கட்டப்பட்ட சக்திமாரியம்மன் கோவில்  கும்பாபிஷேக விழா நாளை (ஜூலை., 11ல்) நடக்கிறது.

இதை முன்னிட்டு நேற்று (ஜூலை., 9ல்) காலை, சித்தர்கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட பசுமாடு, குதிரை மற்றும் மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக வந்தனர்.  

புனித மண், புனித நீர் நிரம்பிய தீர்த்தக்குடங்களை தலையில் சுமந்தபடி,  கோவிலுக்கு வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். மாலையில்  யாகசாலை பூஜை துவங்கியது. இன்று (ஜூலை., 10ல்) காலை மாரியம்மனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனையுடன், கோபுர கலசங் கள் ஸ்தாபனம் செய்யப்படும். நாளை (ஜூலை., 11ல்) காலை, 9:00 மணிக்கு மேல், 10:00 மணிக் குள் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !