ஓசூர் எல்லம்மா தேவி கோவில் மண்டலாபிஷேக பூஜை
ADDED :2319 days ago
ஓசூர்: கெலமங்கலத்தில், பாலகுருமூர்த்தி எல்லம்மா தேவி கோவில் மண்டலாபிஷேகம் நேற்று (ஜூலை., 9ல்) நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட கெலமங்கலம் இருப் பாச்சி நகரில், பாலகுருமூர்த்தி எல்லம்மா தேவி கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த மே, 16ல் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வந்தன. கும்பாபிஷேகம் முடிந்து, 54வது நாளான நேற்று (ஜூலை., 9ல்) காலை, மண்டலாபிஷேகம் நடந்தது. 54 கலசங்கள் வைத்து, கணபதி ஹோமம், காயத்ரி ஹோமம், நவக்கிரக சாந்தி மற்றும் பல்வேறு சிறப்பு ஹோமங்கள் நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.