உடுமலை ஸ்ரீ சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் லட்சார்ச்சனை
ADDED :2655 days ago
உடுமலை:உடுமலை, ஸ்ரீ சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், சுதர்ஷன ஏக தின லட்சார்ச்சனை நேற்று (ஜூலை., 10ல்) நடந்தது.
உடுமலை, ஸ்ரீ சவுந்திரராஜ பெருமாள் கோவிலில், ஆனி சித்திரை, ஸ்ரீ சுதர்சன ஜெயந்தியை முன் னிட்டு, ஸ்ரீ சக்கரத்தாழ்வாருக்கு, ஸ்ரீ சுதர்சன லட்சார்ச்சனை மற்றும் ஹோமம் நேற்று (ஜூலை., 10ல்) நடந்தது.காலை,6:30க்கு, நித்ய திருவாராதனம் மற்றும் சுதர்ஷன ஹோமம் மற்றும் பல்வே று திரவியங்களில் சுவாமிக்கு, மகா திருமஞ்சனம் நடந்தது. மாலை, 6:30க்கு, வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் சக்கரத்தாழ்வார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித் தார். காலை முதல் இரவு வரை, லட்சார்ச்சனை நடந்தது. இரவு, 8:30க்கு, மகா தீபாராதனை மற்றும் சர்வ தரிசன நிகழ்ச்சிகள் நடந்தன.