அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் சஷ்டி விழா
ADDED :2446 days ago
அலங்காநல்லூர்: அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் ஆனி சஷ்டி விழா நடந்தது. இதையொட்டி சஷ்டி மண்டபத்தில் உற்ஸவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு 16 வகையான அபிஷேகம், சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. மூலவர் சுவாமி,வித்தக விநாயகர் மற்றும் ஆதிவேல் சன்னதியிலும் விசேஷ பூஜைகள் நடந்தன.ஏராளமான பக்தர்கள் நெய்விளக்கேற்றி தரிசனம் செய்தனர். அலங்காநல்லூர் ஐயப்பன் கோயில் உட்பிரகார பாலமுருகன் சன்னதியிலும் விசேஷ பூஜைகள் நடந்தன.