திருமங்கலத்தில் ஜூலை 15 சத்யயுக சிருஷ்டி கோயில் கும்பாபிஷேகம்
ADDED :2316 days ago
மதுரை: திருமங்கலம் வசந்த சாய் பவுண்டேஷன் சார்பில் முக்தி நிலையத்திலுள்ள சத்யயுக சிருஷ்டி கோயிலில் பாஹூலாதேவி சமேத மகரிஷி காகபுஜண்டர் மூல விக்ரஹம் பிரதிஷ்டை, மகா கும்பாபிஷேகம் ஜூலை 15 காலை 9:15 மணிக்கு நடக்கிறது.
அன்று காலை 7:00 மணி முதல் மகா கணபதி பூஜை, யாக பூஜை, சபர்சாகுதி, பிம்ப கத்தி, ரக் ஷா பந்தனம், மகா பூர்ணாகுதி, கலசம் புறப்பாடு நடக்கிறது. இதை தொடர்ந்து நடக்கும் கும்பாபிஷே கத்திற்கு பின் அலங்காரம், தீபாராதனை, பிரசாத வினியோகம் நடக்கும். இந்த ஆன்மிக நிகழ்வில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.