உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 40 நாட்களுக்குப்பின் பழநி முதல் ‘வின்ச்’ இயக்கம்

40 நாட்களுக்குப்பின் பழநி முதல் ‘வின்ச்’ இயக்கம்

பழநி: 40 நாட்கள் பராமரிப்பு பணிகள் முடிந்து, பழநி முருகன் கோயிலில் முதலாம் ‘வின்ச்’ இயக்கப்பட்டது.

பழநி மலைக் கோயிலுக்கு எட்டு நிமிடங்களில் எளிதாக செல்லும் வகையில் மூன்று ‘வின்ச்’கள் தினமும் காலை 5:00 முதல் இரவு 10:00 மணி வரை இயக்கப்படுகின்றன. இதில் முதலாம் எண் ‘வின்ச்’சில் ஆண்டு பராமரிப்பு பணிகள் கடந்த ஜூன் 3 முதல் நடந்தது. சேதமடைந்த உபகரணங்கள் மாற்றப்பட்டது. பின்னர் பெட்டிகளில் குறிப்பிட்ட எடை அளவு கற்கள் வைத்து சோதனை ஓட்டம் நடந்தது. நேற்று சிறப்பு பூஜை நடத்தப்பட்டபின், வின்ச் பக்தர்கள் பயன்பாட்டுக்கு இயக்கப்பட்டது. நிகழ்ச்சியில் இணைஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் (பொ) செந்தில்குமார் பங்கேற்றனர். ‘விரைவில் மூன்றாம் எண் ‘வின்ச்’சில் ஆண்டு பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதாக’ கோயில் அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !