ஏகாதசியில் எழுந்தருளிய காரமடை ரங்கநாதர்
ADDED :2378 days ago
காரமடை: காரமடை ரங்கநாதர் கோவிலில், சுக்லபட்ச ஏகாதசியை ஒட்டி, நேற்று அதிகாலையில் திருப்பள்ளி எழுச்சி, கோ தரிசனம், கோ பூஜை, மூலவருக்கு திருமஞ்சனம் ஆகியவை நடந்தது. பால், தயிர், தேன், நெய், இளநீர், சந்தனம், மஞ்சள், மற்றும் மூலிகை திரவியங்களால் ஸ்னபன திருமஞ்சனம் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் சிவப்பு பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சாற்றுமுறை சேவிக்கப்பட்டு சுக்ல பட்ச ஏகாதசி வைபம் நிறைவடைந்தது. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.