மழை பொழிய வேண்டி தயிரன்னம் படைத்து பூஜை
ADDED :2306 days ago
சேலம்: மழை பொழிய வேண்டி, பெருமாள் கோவிலில், தயிரன்னம் படைத்து, பூஜை செய்யப்பட்டது.
சேலம், அம்மாபேட்டை, சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், கடந்த, 11ல், லட்சுமி நரசிம்மர் உள்பட, 108 திவ்யதேச பெருமாள் சுவாமிகளுக்கு கும்பாபி ?ஷகம் நடந்தது. நேற்று, அன்னப்பாவாடை உற்சவத்தையொட்டி, மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தரராஜர், உற்சவர் மூர்த்திகளுக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டது. மேலும், நாடு முழுவதும் நல்ல மழை பொழிய வேண்டும் என்பதற்காக, சவுந்தரராஜரை குளிர்விக்க, தயிரன்னம் மட்டும் படைத்து, பூஜை செய்து, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. வரும், 19ல், இதே கோவிலில், தாயாருக்கு, அன்னப்பாவாடை உற்சவம் நடக்கவுள்ளது.