உடுமலை குருபூர்ணிமா உற்சவம்: திருவிளக்கு பூஜை
                              ADDED :2304 days ago 
                            
                          
                          உடுமலை:உடுமலை, சாய்பாபா கோவிலில், குரு பூர்ணிமா உற்சவம் துவங்கியது.உடுமலை, தில்லை நகர் ஆனந்த சாய்பாபா கோவிலில் ஆண்டு விழா மற்றும் பவுர்ணமி தினத்தையொட்டி குருபூர்ணிமா உற்சவம் நேற்று முதல், நாளை (16ம் தேதி) வரை நடக்கிறது. கோவில் ஆறாவது ஆண்டு விழாவையொட்டி, நேற்று (14ம் தேதி) காலை, 5:30 மணிக்கு ஆரத்தி, 7:00 மணிக்கு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், ஆஞ்சநேயர் ஹோமங்கள் நடந்தன.காலை, 9:00 மணிக்கு ஆனந்த சாய்பாபாவுக்கு, 108 வலம்புரி சங்காபிஷேகமும், காலை, 11:00 மணிக்கு சாய்சத்சரிதம் பாராயண மும் நடைபெற்றன. இன்று (15ம்தேதி), காலை, 10:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாமம், மாலை யில், திருவிளக்கு பூஜை, இரவில் குழந்தைகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (16ம் தேதி), விழா நிறைவாக காலை, 7:00 மணிக்கு அபிஷேக அலங்கார சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடக்கிறது.