உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பவுர்ணமிதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து வழிபடுகின்றனர். அதன்படி ஆனி மாத பவுர்ணமி திதி, இன்று அதிகாலை, 2:43 மணிக்கு தொடங்கி, 17, அதிகாலை 3:34 மணியில் முடிகிறது. இதனால், நேற்றிரவு முதலே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். மேலும், ஆனி பிரம்மோற்சவ விழாவில், நேற்று சுவாமி வீதி உலா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !