உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி சுப்ரமணியர் கோவில் ஆடி கிருத்திகை கொடியேற்றம்

செஞ்சி சுப்ரமணியர் கோவில் ஆடி கிருத்திகை கொடியேற்றம்

செஞ்சி:செஞ்சி பி.ஏரிக்கரை சுப்ரமணியர் கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.கோவிலில் 48வது ஆண்டு ஆடி கிருத்திகை விழா வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, நேற்று (ஜூலை., 15ல்) அதிகாலை 3:00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 4:30 மணிக்கு கலச பிரதிஷ்டை செய்து சிறப்பு ஹோமம் நடந்தது. 7:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது.
தொடர்ந்து மகா தீபாராதனையும், உற்சவர்கள் கோவில் உலா நடந்தது.

மாலை 6:00 மணிக்கு பக்தர்களுக்கும் காப்பு அணிவிக்கப்பட்டது.கமலக்கன்னியம்மன் கோவில் அறங்காவலர் அரங்க ஏழுமலை, கோவில் நிர்வாகிகள் சிவக்குமார், மதியழகன், ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். இன்று 16 முதல் 26ம் தேதி வரை தினமும் சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெறுகிறது. 27ம் தேதி ஆடி கிருத்திகையன்று பால் குடம், அக்னி சட்டி ஊர்வலம். சக்திவேல் அபிஷேகம் மற்றும் வீதியுலா மிளகாய் பொடி அபிஷேகம், செடல் சுற்றுதல், தீ மிதித்தல் மற்றும் தேர் இழுத்தல் உட்பட பல்வேறு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !