செஞ்சி ஆஞ்சநேயர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
செஞ்சி:நல்லாண்பிள்ளை பெற்றாள் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனையொட்டி, 13ம் தேதி மாலை 5:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜை மற்றும் சிறப்பு சங்கல்பம் நடந்தது. 14ம் தேதி காலை 7:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடந்தது.
திருக்கோவிலுார் எம்பெருமனார் ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜ ஆச்சார்ய சுவாமிகள் அசியுரை வழங்கினர். நேற்று (ஜூலை., 15ல்) காலை 6:00 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், 8:30 மணிக்கு கடம் புறப்பாடாகி, 9:40 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இரவு 9:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத திருவேங்கடமுடையான் திருக்கல்யாண உற்சவமும், பக்த ஆஞ்சநேயர் வீதியுலாவும் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு தொடர் அன்னதானம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராம பொது மக்கள் மற்றும் திருப்பணிக் குழுவினர் செய்திருந்தனர்.