உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை கோவிலில் சந்திர கிரகணத்தன்று தினசரி பூஜைகளில் மாற்றமில்லை

திருவண்ணாமலை கோவிலில் சந்திர கிரகணத்தன்று தினசரி பூஜைகளில் மாற்றமில்லை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு, பூஜைகளில் மாற்றமில்லை என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து, கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை: வரும், 17ல், காலை, 1:32 மணி முதல், காலை, 4:29 மணி வரை சந்திர கிரகணம் நடக்க உள்ளது.

இந்நிலையில், அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவம் நடப்பதால், ஆகம சாஸ்திரபடி, திருவிழா காலங்களில், சந்திர கிரகணமோ, சூரிய கிரகணமோ வந்தால், தீர்த்தவாரி உற்சவம் நடத்தக்கூடாது. எனவே, இக்கோவிலில் சந்திர கிரகணத்தன்று தீர்த்தவாரி நடக்காது. நடைமுறையில் உள்ளபடி, தினசரி கால பூஜைகள் நடக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !