உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரசாதம் இது பிரமாதம்: ரசகுல்லா

பிரசாதம் இது பிரமாதம்: ரசகுல்லா

கோல்கட்டா காளிக்கு விருப்பமான நைவேத்யமான  ரசகுல்லா தயாரிக்கும் முறை இடம் பெற்றுள்ளது.  

தேவையானவை:

பால்         –     4 கப்
எலுமிச்சைச் சாறு --    –    ஒரு டேபிள் ஸ்பூன்
தயிர்         –      ஒரு டேபிள் ஸ்பூன்
சர்க்கரை         –     ஒரு கப்
ஏலக்காய்த் தூள்     –     ஒரு சிட்டிகை

செய்முறை:  அடிகனமான பாத்திரம் ஒன்றில் பாலைக் காய்ச்சவும். பால் பாதி கொதிக்கும் போதே எலுமிச்சைச் சாறு, தயிர் சேர்த்துக் கலக்கவும்.  பால் திரிய ஆரம்பித்து விடும். முழுவதும் திரிந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு, மெல்லிய துணியால் வடிகட்டவும். அடியில் தண்ணீரும், மேலே பனீரும் தங்கி விடும். அந்தப் பனீரை சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். அடிகனமான பெரிய பாத்திரத்தில் ஒரு கப் சர்க்கரை, 2 கப் நீர் விட்டு பாகு காய்ச்சவும். பனீர் உருண்டைகளை அதில் சேர்க்கவும். உருண்டைகள் வெந்து பெரிதானதும் ஏலக்காய்த் தூள் தூவி இறக்கி விடவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !