உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யோசித்து செயலில் இறங்கு

யோசித்து செயலில் இறங்கு

எதிரி நாட்டுடன் போர் புரிய தன் படையை அனுப்பினார் ஒரு மன்னர். இரு நாடுகளையும் ஒரு பாலம் பிரித்தது. பாலத்தைக் கடந்து சென்ற படைகள் எதிரிகளுடன் மோதின. அவர்கள் பலமாக இருந்ததால் மன்னரின் படை திணறியது. பாலத்தின் வழியே புறமுதுகிட்டு ஓடியது.  மன்னனுக்கு அவமானம் தாங்கவில்லை. படைத்தலைவரை கோபித்தான்.  “என்ன செய்வாயோ ஏது செய்வாயோ தெரியாது.  மீண்டும் படைகளுடன் போ. எனக்குத் தேவை, எதிரி மன்னரின் தலை”  என்று சொல்லி அனுப்பினார். படைத்தலைவன் மீண்டும் போரிட்ட போதும் எதிரிகளை அசைக்க முடியவில்லை.  மீண்டும் பாலம் வழியே படை வீரர்கள் தப்பித்தனர்.  கோபத்தின் உச்சிக்கே போன மன்னர், தானே தலைமையேற்று படைகளுடன் புறப்பட்டார். பாலத்தைக் கடந்து எதிரி நாட்டுக்குள்  நுழைந்தார். உக்கிரமான போரில் எதிரிகளின் கை ஓங்கியது. மன்னரின் படைகள் வழக்கம் போல் தயங்கின. யோசித்த மன்னர் குண்டை வீசி பாலத்தை தகர்த்தார். படைவீரர்களுக்கு ஏதும் புரியவில்லை. எதிரிகளிடமிருந்து காத்துக் கொள்ளும் நிர்ப்பந்தம் ஏற்பட்டதால் ஆவேசமாக போரிட்டு எதிரி நாட்டு மன்னனை சிறை பிடித்தான். வனது நாடும் கைப்பற்றப்பட்டது. பார்த்தீர்களா! உயிருக்கு ஆபத்து வரும் போது ஆவேசம் எழுகிறது. எவ்வளவு துன்பம் வந்தாலும் அதையும் தாண்டி வெற்றிக்கு முயற்சிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !