விட்டுப் போனாலும் கட்டாயம் செய்தாகணும்!
ADDED :2322 days ago
பெற்றோருக்குரிய திதி நாட்களில் பிதுர்க்கடன் செய்வது அவசியம்.திதிக்குரிய நாளை முன்கூட்டியே தெரிந்து கொண்டு அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். ஆனால், உடல் நலக்குறைவு, பிறப்பு, இறப்பு ஆகியவற்றால் உண்டாகும் தீட்டு, திதியை மறந்து விடுதல், வெளியூரில் இருக்க வேண்டிய கட்டாயம் போன்ற காரணங்களால் விட்டுப் போகக்கூடும். இவ்வாறு விட்டுப் போனால், அடுத்த பிதுர்க்கடன் கொடுக்கும் வரை செய்யும் தெய்வ வழிபாட்டுக்கு பலனில்லை. எனவே, இதற்காக அடுத்தாண்டு வரை காத்திராமல் தேய்பிறை அஷ்டமி, ஏகாதசி, அமாவாசை ஆகிய ஏதாவது ஒருநாளில் விட்டுப் போனதைச் செய்து விட வேண்டும். பிறப்பு, இறப்பு தீட்டினால் தவறியவர்கள், தீட்டு கழிந்த மறுநாள் திதி கொடுக்க வேண்டும்.