இரண்டு மாலை சூடியவள்!
ADDED :2322 days ago
ஆடிப்பூர நன்னாளில் ஸ்ரீவில்லிபுத்துõரில் பெரியாழ்வாரின் நந்தவனத்தில் பூமிதேவி குழந்தை வடிவில் அவதரித்தாள். அவளுக்கு ‘கோதை’ என்று பெயரிட்டுபெரியாழ்வார் வளர்த்தார். இதற்கு ‘நல்வாக்கு தருபவள்’ என்று பொருள். அவள் பாடிய நாச்சியார் திருமொழி, திருப்பாவை பாடல்கள், இறைவனை அடையும் வழியை நமக்கு காட்டுகின்றன. அவள்திருமாலுக்கு இருவிதமான மாலைகளைச் சூட்டினாள். ஒன்று பூமாலை; மற்றொன்று பாமாலை. இந்த இருமாலைகளையும் நாமும் பெருமாளுக்கு சூட்டி அவர்திருவடியை அடையலாம்.