உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் சாய்பாபா குருஸ்தான நாள் நல்லரசன்பேட்டையில் யாகம்

விழுப்புரம் சாய்பாபா குருஸ்தான நாள் நல்லரசன்பேட்டையில் யாகம்

விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த நல்லரசன்பேட்டை சீரடி சாய்பாபா தியான மையத்தில் சாய்பாபா பவுர்ணமி குருஸ்தான நாளையொட்டி, சிறப்பு யாகம் நடந்தது.விழாவையொட்டி, நேற்று (ஜூலை., 16ல்) காலை 10:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. தொடர்ந்து, 11:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை சிறப்பு யாகம், தீபாராதனை நடந்தது.

நிகழ்ச்சிக்கு, ஆவின் சேர்மன் முருகன் தலைமை தாங்கினார். தியான மைய நிர்வாகிகள் கலிய மூர்த்தி, பிரேமா முருகன், லதா, சீனுா கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர்.ஆவின் கூட்டுறவு பதிவாளர் சிவக்குமார், மேலாளர் ராவணன், உதவி ஆய்வாளர் சிவராஜ் மற்றும் அ.தி.மு.க., பிரமுகர் ராமச்சந்திரன் உட்பட ஏராளமனோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !