விழுப்புரம் வீரவாழியம்மன் கோவில் ஆடி வெள்ளித் திருவிழா
ADDED :2282 days ago
விழுப்புரம் : விழுப்புரம் வீரவாழி மாரியம்மன் கோவில் ஆடிவெள்ளி திருவிழா நடக்கிறது. விழுப்புரம் நேருஜி ரோட்டில் உள்ள வீரவாழி மாரியம்மன் கோவிலில், ஆடித் திருவிழா நாளை (ஜூலை., 18ல்) காலை துவங்குகிறது.
தொடர்ந்து 19ம் தேதி முதல் வெள்ளி திருவிழாவையொட்டி காலை சிறப்பு அபிஷேகம், கரகம் வீதியுலா, பகல் 12:00 மணிக்கு சாகை வார்த்தல், இரவு அம்மன் வீதியுலா நடக்கிறது.
இதையடுத்து 20ம் தேதி காலை சிறப்பு அபிஷேகம், இரவு 7:00 மணிக்கு எஸ்.ஏ.டி., குமார் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. 21ம் தேதி காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7:00 மணிக்கு எக்சலண்ட் நடனப் பள்ளி மாணவர்களின் நடன நிகழ்ச்சியும், தொடர்ந்து கும்ப படையலும் நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் வேலவன், ஆய்வாளர் செல்வராஜ், செயல் அலுவலர் ஜெயக்குமார் செய்து வருகின்றனர்.