உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி அருகே ஷீரடி சாய்பாபா கோவிலில், பவுர்ணமி பூஜை

திருத்தணி அருகே ஷீரடி சாய்பாபா கோவிலில், பவுர்ணமி பூஜை

திருத்தணி: திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை, சாய்நகரில் உள்ள ஷீரடி  சாய்பாபா கோவிலில், குரு பவுர்ணமியையொட்டி, அதிகாலை, 5:00 மணிக்கு,  சுப்ரபாதம், காகட ஆரத்தி நடந்தது. காலை, 7:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு  அபிஷேகமும், காலை, 11:00 மணி முதல், மதியம், 12:30 மணி வரை  சத்யநாராயண பூஜை நடந்தது. மாலை, 4:00 மணி முதல், 6:30 மணி வரை,  சத்குரு சாயி பஜனைகள், பின், சந்தியா ஆரத்தியுடன் பவுர்ணமி பூஜை  நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !