உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ’கடவுளின் திருவடியே மிகச்சிறந்த செல்வம்’

’கடவுளின் திருவடியே மிகச்சிறந்த செல்வம்’

கோவை : ”கடவுளின் திருவடியே, அனைத்து செல்வங்களையும் விட சிறந்தது,”  என, ஆடி உத்சவ் ஆன்மிக சொற்பொழிவில், ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதர் பேசினார்.

கோவை ராம்நகர் ஐயப்பன் பூஜா சங்கத்தில், நேற்று (ஜூலை., 17ல்) நடந்த ஆடி உத்சவ் நிகழ்ச் சியின் இரண்டாம் நாள் நிகழ்வில், ’ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்தரம்’ எனும் தலைப்பில், ஸ்ரீ துஷ்ய ந்த் ஸ்ரீதர் பேசியதாவது:சாஸ்திரங்களில்  தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளின் அர்த்தங்களை, அறிந்து கொள்ள சற்று  உழைக்க வேண்டும். சனாதன தர்மத்தை தொடர்ந்து கேட்டால் தான், அது நம்மை  வந்தடையும். அனைத்து உயிர்களுக்கும் ஜீவாத்மா உண்டு. சரீரம் மட்டுமே  மாறுபடக் கூடிய ஒன்று.மூன்று வித செல்வங்கள் இருப்பதாக, முன்னோர்கள்  கூறியுள்ளனர். அந்த மூன்று செல்வங்கள் அனைவருக்கும் கிடைக்க, லட்சுமி  தேவி காரணமாக உள்ளார். அனைத்து
செல்வங்களையும் விட, மிகச்சிறந்த  செல்வம், கடவுளின் திருவடிகள். அந்த திருவடியை பற்றிக் கொள்ள  வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !