மண்டபத்தில் ஒதுங்கிய அம்மன் சிலை
ADDED :2388 days ago
ராமேஸ்வரம் : மண்டபம் தெற்கு கடற்கரையில் நேற்று கருங்கல்லில் வடிவமைத்த 3 அடி உயரம், 4 கைகளுடன் கூடிய அம்மன் சிலை ஒதுங்கியது. தகவலறிந்த மண்டபம் மரைன் போலீஸ் எஸ்.ஐ., கணேசமூர்த்தி தலைமையில் போலீசார் அம்மன் சிலை மீட்டு விசாரித்தனர். இந்த அம்மன் சிலை கிராமத்தில் மக்கள் தரிசித்து வந்த சிலையாக இருக்கலாம். சேதம் அடைந்த நிலையில் புதிய அம்மன் சிலை பிரதிஷ்டை செய்த மக்கள் பழைய சிலையை கடற்கரையில் விட்டு சென்றிருக்கலாம், என போலீசார் தெரிவித்தனர்.