உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலை ஏழுமலையானுக்கு ஸ்ரீரங்கம் கோவில் பட்டு வஸ்திரம்

திருமலை ஏழுமலையானுக்கு ஸ்ரீரங்கம் கோவில் பட்டு வஸ்திரம்

 திருப்பதி, திருமலை ஏழுமலையானுக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சார்பில் பட்டு வஸ்திரம் சமர்பிக்கப்பட்டது.

திருமலை ஏழுமலையானுக்கு ஆடி மாதம் முதல் நாளில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சார்பில் பட்டு வஸ்திரம் சமர்பிக்கப்படுவது வழக்கம்.அதன்படிநேற்று ஏழுமலையானுக்கு ஆறு பட்டு வஸ்திரங்கள் சமர்பிக்கப்பட்டன. பட்டு வஸ்திரங்களை தமிழக அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் அபூர்வா வர்மா இணை கமிஷனர் ஜெயராமன் திருமலைக்கு கொண்டு வந்தனர்.பட்டு வஸ்திரங்களை பெற்றுக் கொண்ட பெரிய ஜீயர் பூஜைகள் செய்து அதை தலையில் சுமந்தபடி மாடவீதியில் வலம் வந்து கோவிலுக்குள் கொண்டு சென்றார். அதில் நான்கு பட்டு வஸ்திரங்கள் ஏழுமலையானுக்கும் ஒன்று மலையப்ப ஸ்வாமிக்கும் மற்றொன்று விஷ்வக் சேனருக்கும் சமர்பிக்கப்பட்டது.வைகுண்ட ஏகாதசி அன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு திருமலை தேவஸ்தானம் பட்டு வஸ்திரம் சமர்பித்து வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !