தூக்கம் நம் கண்களைத் தழுவட்டுமே!
ADDED :5085 days ago
சிலருக்கு இரவில் நிம்மதியாக உறங்கவே முடிவதில்லை. ஏதோ சிந்தனை, எதிர்காலம் குறித்த பயம், குழந்தை இல்லையே என்ற கவலை, குழந்தைகள் இருந்தால் அவர்களைப் பற்றிய கவலை...இவையெல்லாம் நிம்மதியையும் தூக்கத்தையும் கெடுக்கும். இதனால் பயங்கரமான கனவுகள், அதைக்கண்டு அலறுவது போன்ற துன்பம் ஏற்படுகிறது. இவர்கள் ஒன்பது வெள்ளிக்கிழமை தொடர்ந்து காளி அல்லது துர்க்கை அம்மன் சந்நிதியில், ஒரு எலுமிச்சம்பழத்தை அம்மனின் பாதத்தில் வைத்து வாங்கிக் கொள்ள வேண்டும். அதை தலையணை அருகில் வைத்து தூங்கினால், கனவுத்தொல்லை இருக்காது. இது முடியாதவர்கள் காலையில் நீராடியதும், திருவிளக்கின் முன் அமர்ந்து ஓம்காளி மந்திரத்தை 108 முறை ஜெபிப்பது சிறந்த பரிகாரம்.