நோய் தீர்க்கும் மாவிளக்கு
ADDED :2320 days ago
ஆடிவெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்கேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து அருள்வாள். பச்சரிசியை ஊற வைத்து இடித்து மாவாக்கி, அதில் இளநீர், வெல்லப்பாகு, ஏலக்காய், சுக்குத்துாள் கலந்து காமாட்சி விளக்கு போல செய்து, அம்மன் முன் விளக்கேற்றி வைப்பர். அந்த விளக்கையே அம்மனாகக் கருதி வணங்குவர். மாரி, காளி, துர்கை போன்ற பெண் தெய்வங்களுக்கு இந்த வழிபாட்டை செய்வது சிறப்பு. இதனால் உடல்நலம் சிறக்கும்.